/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதிய வேகத்தடைகள் பயன்தருமா? எச்சரிக்கை பலகை வைக்க எதிர்பார்ப்பு
/
புதிய வேகத்தடைகள் பயன்தருமா? எச்சரிக்கை பலகை வைக்க எதிர்பார்ப்பு
புதிய வேகத்தடைகள் பயன்தருமா? எச்சரிக்கை பலகை வைக்க எதிர்பார்ப்பு
புதிய வேகத்தடைகள் பயன்தருமா? எச்சரிக்கை பலகை வைக்க எதிர்பார்ப்பு
ADDED : நவ 10, 2024 02:11 AM

பொன்னேரி:பொன்னேரி - மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையில், வேண்பாக்கம், தடப்பெரும்பாக்கம், பொன்நகர் ஆகிய பகுதிகளில் வேகத்தடைகள் உள்ளன. இவை உரிய பராமரிப்பு இன்றி, சேதம் அடைந்தும், வர்ணம் பூசப்படாமல் இருக்கிறது.
இந்நிலையில், தற்போது கொக்குமேடு, புலிக்குளம், ஆத்ரேயமங்களம் ஆகிய இடங்களில் புதியதாக, வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
புதியாக வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருப்பது குறித்து, அதை வாகன ஓட்டிகள் முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கு ஏதுவாக எந்தவொரு எச்சரிக்கை பலகையும் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் வேகத்தடைகள் சரியான திட்டமிடல் இன்றி அமைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, ஆத்ரேயமங்களம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட வேகத்தடையானது, பள்ளியின் நுழைவுவாயில் பகுதிக்கு முன் அமைக்காமல், அதை கடந்து அமைத்து உள்ளனர்.
இதனால் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பிற்கு இது பயன்தருமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அதேபோன்று, தடப்பெரும்பாக்கம் பகுதியில் ஏற்கனவே இரண்டு வேகத்தடைகள் உள்ள நிலையில், தற்போது அவற்றின் அருகில், 50மீ. தொலைவில் புதியதாக இரண்டு அமைக்கப்பட்டு உள்ளன. இவையும் சரியான திட்டமிடல் இன்றி அமைக்கப்பட்டு உள்ளன.
போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டிகள், வியாபாரிகள், குடியிருப்புவாசிகள் ஆகியோரது ஆலோசனையை பெற்று வேகத்தடைகளை பயனுள்ள இடத்தில் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், விபத்துக்களை தவிர்க்க வேண்டுமானால், வேகத்தடைகள் இருப்பது குறித்து எச்சரிக்கை பலகைகள் கட்டாயம் வைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.