/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரங்காபுரத்தில் தொகுப்பு வீடுகள் சேதம் ஊரக வளர்ச்சி துறை நடவடிக்கை எடுக்குமா?
/
ரங்காபுரத்தில் தொகுப்பு வீடுகள் சேதம் ஊரக வளர்ச்சி துறை நடவடிக்கை எடுக்குமா?
ரங்காபுரத்தில் தொகுப்பு வீடுகள் சேதம் ஊரக வளர்ச்சி துறை நடவடிக்கை எடுக்குமா?
ரங்காபுரத்தில் தொகுப்பு வீடுகள் சேதம் ஊரக வளர்ச்சி துறை நடவடிக்கை எடுக்குமா?
ADDED : டிச 07, 2024 01:40 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் ராமாபுரம் ஊராட்சி ரங்காபுரம், காலனியில் 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அரசு தொகுப்பு வீடுகள் சேதமடைந்து உள்ளது.
இந்த வீடுகள் இதுவரை பராமரிக்கப்படாததால் பலவீனமடைந்து, கூரைகள் பெயர்ந்துள்ளன.
சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சிமென்ட் காரைகள் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் அச்சுறுத்துகின்றன. கடந்த வாரம் பெய்த கனமழையால் ரங்காபுரத்தின் 50, வீடுகளில் 15க்கும் மேற்பட்ட வீடுகள் இடியும் அபாயத்தில் உள்ளது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த காந்தா 60 கூறியதாவது:
இங்குள்ள தொகுப்பு வீடுகள் அனைத்துமே மோசமான நிலையில் உள்ளன. சிலர் மட்டுமே தொகுப்பு வீடுகளை தங்களுக்கு ஏற்ப கட்டிக் கொண்டனர். நான் உட்பட மற்றவர்களுக்கு எங்கள் இஷ்டபடி வீடு கட்டவோ, சீரமைக்கவோ நிதி வசதி இல்லை. கடந்தாண்டு பெய்த மழையில் என்னுடைய வீடு இடிந்து விழுந்தது. ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். இதுவரை தொகுப்பு வீடு வழங்கவில்லை. தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரங்காபுரத்தை சேர்ந்த ஜெகன் 35 கூறியதாவது:
ஒவ்வொரு மழையின் போதும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் பார்வையிடுகின்றனர். வீடு கட்டி தருவதாக வாக்குறுதி அளிக்கின்றனர். பின் கண்டுக்கொள்வதில்லை. எங்கள் பகுதியில் தொகுப்பு வீடுகளில் வசிப்பவர்களின் தலைமீது கூரை விழுந்து மூன்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். அதிகாரிகள் வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து பி.டி.ஓ., அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.