/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொதட்டூரில் பேருந்து நிலைய நடைபாதை கடைகள் அகற்றப்படுமா?
/
பொதட்டூரில் பேருந்து நிலைய நடைபாதை கடைகள் அகற்றப்படுமா?
பொதட்டூரில் பேருந்து நிலைய நடைபாதை கடைகள் அகற்றப்படுமா?
பொதட்டூரில் பேருந்து நிலைய நடைபாதை கடைகள் அகற்றப்படுமா?
ADDED : ஜன 05, 2025 01:42 AM

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில், 30,000 பேர் வசித்து வருகின்றனர். பொதட்டூர்பேட்டையில் பேருந்து நிலையத்தில் இருந்து, வேலுார், திருத்தணி, புத்துார் உள்ளிட்ட மார்க்கங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதிகாலை முதல், நள்ளிரவு வரை பகுதிவாசிகள் வெளியூர்களுக்கு பயணிக்கின்றனர். இதனால், பேருந்து நிலையம் மற்றும் அதையொட்டி சந்தை வளாகத்தில் எந்நேரமும் பகுதிவாசிகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளன.
இந்நிலையில், பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதியில் சாலையை ஆக்கிரமித்து நடைபாதை கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், வாகனங்கள் செல்லவும், பாதசாரிகள் நடந்து செல்லவும் சிக்கல் ஏற்படுகின்றன.
எனவே, பொதட்டூர் பேருந்து நிலையத்தை சுற்றி ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற வேண்டும்.