/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தண்டவாளத்தில் சுற்றித்திரிந்த பசு மாடு போராடி வெளியேற்றிய பயணியர் தெற்கு ரயில்வே நிர்வாகம் விழிக்குமா?

ADDED : நவ 19, 2025 12:46 AM

திருவாலங்காடு: திருவாலங்காடு ரயில் நிலையத்திற்குள் புகுந்த பசு மாடு, வெளியேறும் வழியை தேடி தண்டவாளத்தில் சுற்றித் திரிந்தது. அதனுடன் மல்லுக்கட்டிய பயணியர் பத்திரமாக வெளியேற்றினர்.
சென்னை ---- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், திருவள்ளூர் அருகே திருவாலங்காடு ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் வழித்தடத்தில், தினமும் 300க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரயில் நிலையம் ஒட்டிய கிராமங்களில் கால்நடைகள் வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது.
இந்த வழித்தடத்தில், வந்தே பாரத், சதாப்தி போன்ற அதிவிரைவு ரயில்கள் இயக்கப்படுவதால், தண்டவாளத்திற்குள் கால்நடைகள் நுழைய முடியாத படி, தெற்கு ரயில்வே நிர்வாகத்தால் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், திருவாலங்காடு ரயில் நிலைய கேட்டின் ஒன்றாவது நடைமேடை வழியாக இரண்டு பசுக்கள் உள்ளே நுழைந்தன.
அவை, நான்காவது தண்டவாளம் அருகே உள்ள வெளியேறும் கேட்டினுள் நுழைந்தன.
அப்போது, ஒரு பசு மாடு கேட் வழியாக வெளியேறிய நிலையில், மற்றொன்று வெளியேற முடியாமால் தவித்தது. அந்த மாடு தண்டவாள பகுதிகளில் அச்சத்துடன் சுற்றித் திரிந்ததை கண்ட ரயில் பயணியர், பசு மாடுடன் 10 நிமிடம் மல்லுக்கட்டி கேட் வழியாக வெளியேற்றினர்.
சம்பவ நேரத்தில் ரயில்கள் வராததால் விபத்து தவிர்க்கப்பட்டது. கால்நடைகள் தண்டவாளத்திற்குள் நுழைவதை தடுக்க, ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.