/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விவாத பொருளானது கும்மிடி தாமரை ஏரி கலெக்டரை சந்திக்க கவுன்சிலர்கள் முடிவு
/
விவாத பொருளானது கும்மிடி தாமரை ஏரி கலெக்டரை சந்திக்க கவுன்சிலர்கள் முடிவு
விவாத பொருளானது கும்மிடி தாமரை ஏரி கலெக்டரை சந்திக்க கவுன்சிலர்கள் முடிவு
விவாத பொருளானது கும்மிடி தாமரை ஏரி கலெக்டரை சந்திக்க கவுன்சிலர்கள் முடிவு
ADDED : நவ 18, 2025 03:32 AM

பித்தளை செம்பு, வெள்ளி கொலுசை காட்டி ஆவேசம்
கும்மிடிப்பூ: ண்டி: கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியால் நகரின் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்ட விவகாரத்தை துறை சார்ந்த அலுவலர்கள் கண்டுக்கொள்ளாததால், பேரூராட்சி கவுன்சிலர்கள், திருவள்ளூர் கலெக்டரை சந்தித்து முறையிட்டு தீர்வு காண்பது என, கவுன்சிலர் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
கும் மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில், தலைவர் ஷகிலா தலைமையில் நேற்று கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. செயல் அலுவலர் பாஸ்கரன், துணை தலைவர் கேசவன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், வரவு, செலவு, பிறப்பு, இறப்பு, வரி வசூல், நிலுவை, திட்ட பணிகள் உள்ளிட்ட, 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மான நகல் வாசித்து முடித்தது ம், கூட்டத்தின் விவாத பொருளானது தாமரை ஏரி விவகாரம்.
அப்துல் கரீம் - தி.மு.க.,: தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுநீர் கலந்து தாமரை ஏரி முற்றிலும் மாசு அடைந்தது மட்டுமின்றி, ஒட்டு மொத்த நகரின் நிலத்தடி நீரும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
தீபா - அ.தி.மு.க.,: கும்மிடிப்பூண்டி நகரில் நிலத்தடி நீ ர் பாதிப்பால், வீட்டில் பயன்படுத்தும் பித்தளை, செம்பு, வெள்ளி பாத்திரங்கள் மற்றும் வெள்ளி கொலுசுகள் கருப்பு நிறத்தில் மாறியிருப்பதை பாருங்கள் என அவர் கையில் எடுத்து வந்த பித்தளை மற்றும் செம்பு பாத்திரங்களையும், அவர் அணிந்திருந்த வெள்ளி கொலுசை யும் கழற்றி காண்பித்தா ர்.
தலைவர் ஷகிலா- தி.மு.க.,: தாமரை ஏரி விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அலுவலர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலரிடமும் தகவல் தெரித்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளோம். கலெக்டர் ஆய்வு செய்ய வருவார் என எதிர்ப்பார்க்கிறோம்.
ரவி-அ.தி.மு.க., : தாமரை ஏ ரியால், கும்மிடிப்பூண்டி நகர பகுதி மக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அரசு துறை அலுவலர் கள் நடவடிக்கை எடுப்பார்கள் என நாம் காத்திருக்க வேண்டாம்.
நகர் பகுதி மக்களின் பிரதிநிதிக ள் என்ற முறையில், தலைவர், துணை தலைவர், கவுன்சிலர்கள் ஒன்று கூடி, மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து முறையிட வேண்டும். ஏரியை மீட்டெடுக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. நிலைமை யின் விபரீதம் அறிந்து கட்சி பாகுபாடின்றி ஒற்றுமையுடன் நாம் செயல்பட வேண்டும்.
இதே கருத்தை அனைத்து கவுன்சிலர்கள் வலியுறுத்திய நிலையில், தலைவர், துணை தலைவர் மற்றும் கவுன்சிலர்கள், கலெக்டரை சந்தித்து முறையிடுவது என முடிவு எடுக்கப்பட்டது.

