/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெரியபாளையம் பேருந்து நிலைய நேரக்காப்பாளர் அறை மாற்றப்படுமா?
/
பெரியபாளையம் பேருந்து நிலைய நேரக்காப்பாளர் அறை மாற்றப்படுமா?
பெரியபாளையம் பேருந்து நிலைய நேரக்காப்பாளர் அறை மாற்றப்படுமா?
பெரியபாளையம் பேருந்து நிலைய நேரக்காப்பாளர் அறை மாற்றப்படுமா?
ADDED : ஜூலை 14, 2025 11:30 PM

ஊத்துக்கோட்டை, பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள நேரக்காப்பாளர் அறையை, பயணியர் வசதிக்காக முன்புறம் மாற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள முக்கிய அம்மன் கோவில்களில், பெரியபாளையம் பவானியம்மன் கோவிலும் ஒன்று. முக்கிய நாட்கள் மற்றும் விடுமுறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய வருவர்.
சென்னை, திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மாநகர பேருந்துகள், விழுப்புரம் கோட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தினமும் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் பெரியபாளையம் சென்று வருகின்றன.
இங்குள்ள பேருந்து நிலையம், ஆக்கிரமிப்பால் சுருங்கியுள்ளது. இதனால், 10க்கும் குறைவான பேருந்துகளை மட்டுமே நிறுத்த முடியும்.
இங்கு வரும் பயணியர் வசதிக்காக, நேரக்காப்பாளர் அறை அமைக்கப்பட்டுள்ளது. நிலையத்தின் பின்புறம் நேரக்காப்பாளர் அறை இருப்பதால், பேருந்துகள் குறித்து அறிய முடிவதில்லை.
விரைவில் ஆடி மாதம் துவங்க உள்ள நிலையில், தினமும் அதிகளவு பக்தர்கள் வருவர்.
எனவே, பயணியர் நலன் கருதி, பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் பின்புறம் உள்ள நேரக்காப்பாளர் அறையை, முன்பகுதியில் மாற்றி அமைக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.