/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமையுமா?
/
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமையுமா?
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமையுமா?
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமையுமா?
ADDED : ஜன 30, 2025 10:53 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் பேருந்து நிலையத்தில், சமூக விரோதிகளால் நடக்கும், 'ஈவ் டீசிங்' உள்ளிட்டவற்றை தடுக்க, புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் ராஜாஜி சாலையில் செயல்படும், திரு.வி.க., பேருந்து நிலையத்தில் இருந்து, சென்னை, காஞ்சிபுரம், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, செங்குன்றம், ஸ்ரீபெரும்புதுார், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
காலை, மாலை நேரங்களில், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர், பணிக்கு செல்லும் பெண்கள் என, பல்லாயிரக்கணக்கானோர் இப்பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
மாலை நேரத்தில், பேருந்துக்காக காத்திருக்கும் மாணவியர், பெண்களை, சில சமூக விரோதிகள் சுகிண்டல் செய்து, 'ஈவ் டீசிங்' செய்து வருகின்றனர்.
இதை தட்டிக் கேட்கும் நபர்களுக்கும், சமூக விரோதிகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது.
சில நேரங்களில், கத்திக்குத்து சம்பவங்களும் நடந்து, திருவள்ளூர் டவுன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
எனவே, பெண்கள் மீதான 'ஈவ் டீசிங்' பிரச்னையை தடுக்க, பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைத்து, காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும், பள்ளி நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும், சமூக ஆர்வலர்கள் மாவட்ட எஸ்.பி.,க்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

