/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
3 கிலோ தாய்லாந்து கஞ்சாவுடன் ஏர்போர்ட்டில் சிக்கிய பெண் கைது
/
3 கிலோ தாய்லாந்து கஞ்சாவுடன் ஏர்போர்ட்டில் சிக்கிய பெண் கைது
3 கிலோ தாய்லாந்து கஞ்சாவுடன் ஏர்போர்ட்டில் சிக்கிய பெண் கைது
3 கிலோ தாய்லாந்து கஞ்சாவுடன் ஏர்போர்ட்டில் சிக்கிய பெண் கைது
ADDED : நவ 24, 2024 05:53 AM
சென்னை: தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 3 கிலோ கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்செய்தனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து, நேற்று முன்தினம் இரவு இண்டிகோ விமானம் சென்னைக்கு வந்தது. அதில் வந்திருந்த பயணியரை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் கண்காணித்தனர்.
அதில் வந்த பெண் பயணி ஒருவர் மீது, அதிகாரிகளுக்கு சந்தேகம்ஏற்பட்டது. அவரது பயண விபரத்தை பார்த்த போது, சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
பெண் பயணியை தனியறைக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். அவரது உடமைகளையும் சோதனை செய்தனர்.
அப்போது, பெண் பயணி எடுத்து வந்த பெட்டியின் உள்ளே தனிஅறை ஒன்று இருந்தது. அதில், சிறிய அளவிலான பார்சல் இருந்தது.
அதை பிரித்து பார்த்த போது, உயர் ரக கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதன் எடை 3 கிலோ. சர்வதேச மதிப்பு 1.5 கோடி ரூபாய்.
கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், சென்னையில் யாருக்கு சப்ளை செய்ய எடுத்து வரப்பட்டது, விமான நிலையத்திற்கு வெளியே வாங்கிக் கொள்ள காத்திருந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.