ADDED : நவ 08, 2024 08:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் எல்லையோர சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில், 7 கிலோ எடை குட்கா சிக்கியது. அதன் மதிப்பு, 14 ஆயிரம் ரூபாய். காருடன் குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்திய, சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த மாலதி, 44, கார் டிரைவரான புரசைவாக்கம் கிருபாகரன், 47, ஆகிய இருவரை கைது செய்தனர்.