ADDED : ஜூலை 04, 2025 02:37 AM
சோழவரம்:சோழவரம் அடுத்த ஆட்டந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் அனந்தராமன், 48. தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இரு தினங்களுக்கு முன், அவரது மனைவி பீரோவில் இருந்த நகைகளை எடுக்க சென்றார். நகைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியுற்றார். அனந்தராமன் சோழவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
குற்றப்பிரிவு போலீசார் சந்தேகத்தின்பேரில், அனந்தராமன் வீட்டில் வேலை செய்யும், செங்குன்றம் அடுத்த நாரவாரிகுப்பம் பகுதியை சேர்ந்த லட்சுமி, 37, என்பவரிடம் விசாரித்தனர்.
இவர், அனந்தராமன் வீட்டில், 10வருடங்களாக வீட்டு வேலை செய்து வருகிறார். போலீசார் விசாரணையில், அனந்தராமன் வீட்டில் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.
அதையடுத்து போலீசார் லட்சுமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து, எட்டு சவரன் நகை, 40 கிராம் வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டன.