ADDED : ஜன 27, 2025 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை அடுத்த, தண்டலம் கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் பிரகாசம்.
இவர் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், தண்டலம் கிராமத்தில், மனநிலை பாதித்த, 60 வயது மதிக்கத்தக்க பெண் மீது, கடந்த, 25ம் தேதி, அரசு பேருந்து, டி.என்.21 என்.1680 மோதியது என தெரிவித்து இருந்தார்.
போலீசார் அவரை, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக, சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர், நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.