ADDED : ஏப் 10, 2025 08:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:சென்னை, பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் சுந்தர், 25. இவர் நேற்று பண்ருட்டி பகுதியை சேர்ந்த உறவினர் அபிராமி, 25, என்பவருடன் கும்மிடிப்பூண்டி அடுத்த தடா பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு சென்றுவிட்டு, பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆரம்பாக்கம் அடுத்த அரும்பாக்கம் அருகே செல்லும்போது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி சுந்தர் ஓட்டி சென்ற பைக்கில் மோதியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த, அபிராமி, லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார். சுந்தர் காயங்களுடன் உயிர் தப்பினார்.
ஆரம்பாக்கம் போலீசார் சென்று அபிராமியின் உடலை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

