ADDED : செப் 28, 2024 07:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை: பென்னலுார்பேட்டை அருகே, ராஜபாளையம் கிராமம், ராஜா தெருவில் வசித்து வந்தவர் வெங்கடாசலம் மனைவி தீபா, 40; நேற்று முன்தினம் இரவு, தீபா, 'ஹோண்டா ஆக்டிவா'' பைக்கில், தந்தை சுப்பிரமணிராஜூவை ஏற்றிக் கொண்டு திருவள்ளூரில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். சீத்தஞ்சேரி வன அலுவலகம் அருகே சென்று கொண்டு இருந்தபோது, சாலையில் நிலை தடுமாறி விழுந்தார்.
அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம், இவர் சென்ற டூ - வீலர் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.