/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நடந்து சென்ற பெண் மீது பைக்கில் மோதியவர் பலி
/
நடந்து சென்ற பெண் மீது பைக்கில் மோதியவர் பலி
ADDED : ஜூன் 16, 2025 11:30 PM
திருவாலங்காடு, பூண்டி ஒன்றியம் தோமூர் சந்து தெருவைச் சேர்ந்தவர் கன்னியப்பன், 35. இவர், திருவள்ளூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் மாலை 8:00 மணியளவில், பணி முடித்து 'ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர்' இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் அடுத்த புதூர் காந்தி கிராமம் அருகே வந்த போது, சாலையில் நடந்து சென்ற செல்வி என்பவர் மீது மோதினார். இந்த விபத்தில் கன்னியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கனகம்மாசத்திரம் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். காயமடைந்த செல்வி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.