/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இயந்திரத்தில் சிக்கி பெண் கை துண்டிப்பு
/
இயந்திரத்தில் சிக்கி பெண் கை துண்டிப்பு
ADDED : டிச 19, 2024 10:44 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், கூளூர் கிராமத்தில் சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிள் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையில், ராமஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஆஷா, 35, என்பவர், ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று காலை வழக்கம்போல, பணிக்கு சென்றவர் இயந்திரத்தை ஆப்பரேட் செய்தபோது எதிர்பாராத விதமாக அவரது வலது கை இயந்திரத்தில் சிக்கி துண்டானது.
இதில் படுகாயம் அடைந்த ஆஷாவை சக ஊழியர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.