/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊத்துக்கோட்டை அருகே பெண்ணின் எலும்பு கூடு
/
ஊத்துக்கோட்டை அருகே பெண்ணின் எலும்பு கூடு
ADDED : செப் 03, 2025 01:35 AM
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, பெண்ணின் எலும்பு கூட்டை போலீசார் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஊத்துக்கோட்டை தாலுகா, பென்னலுார்பேட்டை குறுவட்டம், அரியத்துார் கிராமத்தில் ஊரை தாண்டி, தனியார் நிலத்தில் எலும்பு கூடு இருப்பதாக, அரியத்துார் கிராம நிர்வாக அலுவலர் முருகையா, பென்னலுார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., ஜெய்ஸ்ரீ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள், தடயவியல் துறையினர் ஆய்வு செய்தனர்.
இதில் பெண்ணின் எலும்பு கூடு என்பது உறுதி செய்யப்பட்டது. இவர் யார், எந்த ஊர், கொலை செய்யப்பட்டாரா, தற்கொலை செய்து கொண்டாரா என்பது பிரேத பரிசோதனை செய்த பின் தான் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
எலும்பு கூடு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
★