/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெண் போலீசார் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்: ஏ.டி.ஜி.பி.,
/
பெண் போலீசார் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்: ஏ.டி.ஜி.பி.,
பெண் போலீசார் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்: ஏ.டி.ஜி.பி.,
பெண் போலீசார் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்: ஏ.டி.ஜி.பி.,
ADDED : ஜூலை 10, 2025 02:45 AM

திருவள்ளூர்:பெண் போலீசார் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டுமென, ஏ.டிஜி.பி., தினகரன் அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 2024ம் ஆண்டு திருவள்ளூர், வேலுார், விழுப்புரம், ஆகிய இடங்களில் காவலர் பயிற்சி பள்ளியில் 734 பெண் போலீசாருக்கு ஏழு மாத கால அடிப்படையில் பயற்சி நடந்தது.
இதில் திருவள்ளூர் பாண்டூர் காவல் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற 279 இரண்டாம் நிலை பெண் போலீசாருக்கு சட்ட வகுப்பு, ஆயுத பயிற்சி, தற்காப்பு கலை, கவாத்து பயிற்சி, யோகா, கலவர தடுப்பு உள்ளிட்ட பல பயிற்சிகள் அளிக்கப்பட்டன. நேற்று முன்தினம் மாலை நடந்த பயிற்சி நிறைவு விழாவில் ஏ.டி.ஜி.பி., செயலாக்கம் முனைவர் தினகரன் பேசும்போது, 'அவசர காலம் உள்ளிட்ட பல்வேறு சிக்கலான சூழ்நிலைகளில் பெண் போலீசார் திறம்பட செயலாற்ற வேண்டும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை மனதில் வைத்து நாட்டுக்கும், சமூகத்திற்கும் முழு அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும்' என்றார்.
பின் மாநில அளவில் அனைத்து பயிற்சிகளிலும் முதல் மற்றும் மூன்றாமிடம் பிடித்த திருவள்ளூர் பெண் பயிற்சி போலீசாருக்கும், திருவள்ளூர் காவலர் பயிற்சி பள்ளியில் துப்பாக்கி சுடுதலில் முதல் மூன்று இடங்களை பெற்ற பெண் பயிற்சி போலீசாருக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கினார். விழாவில் திருவள்ளூர் காவலர் பயிற்சி பள்ளி முதல்வர் சந்திரகுமார், துணை முதல்வர் கணேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

