/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஷேர் ஆட்டோ, சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பெண்கள் பயணம்
/
ஷேர் ஆட்டோ, சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பெண்கள் பயணம்
ஷேர் ஆட்டோ, சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பெண்கள் பயணம்
ஷேர் ஆட்டோ, சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பெண்கள் பயணம்
ADDED : ஜன 03, 2025 02:40 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் நகர் பகுதியில் ஷேர் ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பெண்கள் பயணம் மேற்கொள்வதை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் நகரைச் சுற்றிலும், கடம்பத்துார், திருப்பாச்சூர், பாண்டூர், ஈக்காடு, காக்களூர் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களுக்கு போதிய பொது போக்குவரத்து வாகனங்கள் இயக்கப்படுவதில்லை.
இதனால், அப்பகுதி பொதுமக்கள் ஆபத்தான முறையில் ஷேர் ஆட்டோக்கள், மினி வேன்கள் போன்ற சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். இவற்றில், பயணம் செல்வோர், அடைத்தபடி நெரிசலில் பயணிக்க வேண்டி உள்ளனர்.
பொதுவாக, ஷேர் ஆட்டோக்களில் நான்கு பேருக்கு மேல் பயணிக்கக் கூடாது. மேலும், சரக்கு வாகனங்களிலும் பொதுமக்கள் பயணம் செய்வது தடை செய்யப்பட்டு உள்ளது. ஏதாவது விபத்து நேரிட்டால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் என்பதால், போக்குவரத்து துறையினர் இந்த தடையை விதித்துள்ளனர்.
இருப்பினும், கிராமவாசிகள் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். வட்டார போக்குவரத்து துறையினர் மற்றும் போக்குவரத்து போலீசார், இதுபோன்ற ஆபத்தான பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

