/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடியில் பேருந்து வசதியின்றி பெண் தொழிலாளர்கள் தவிப்பு
/
கும்மிடியில் பேருந்து வசதியின்றி பெண் தொழிலாளர்கள் தவிப்பு
கும்மிடியில் பேருந்து வசதியின்றி பெண் தொழிலாளர்கள் தவிப்பு
கும்மிடியில் பேருந்து வசதியின்றி பெண் தொழிலாளர்கள் தவிப்பு
ADDED : ஜூலை 03, 2025 02:46 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், 220 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள தொழிற்சாலைகளில் ஒப்பந்த அடிப்படையில், 4,000க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இதில் சிலர் அருகில் உள்ள கிராமங்களில் வசித்து வரும் நிலையில், பெரும்பாலான பெண் தொழிலாளர்கள், கும்மிடிப்பூண்டியை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து வந்து செல்கின்றனர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்திற்கு பேருந்து வசதி இல்லாததால், ஷேர் ஆட்டோ, லாரி என, கிடைக்கின்ற வாகனங்களில் வேலைக்கு வந்து செல்கின்றனர். பெண் தொழிலாளர்களின் பிரதான போக்குவரத்து வாகனமாக இருப்பது ஷேர் ஆட்டோக்கள் மட்டுமே.
ஒரு ஷேர் ஆட்டோவில் குறைந்தது, 20 பெண்கள் வரை பயணிப்பதால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். குடும்ப சுமையை சமாளிக்க வேறு வழியில்லாமல், ஆபத்தாக பயணிப்பதாக தெரிவிக்கின்றனர்.
எனவே, பெண்களுக்கான இலவச பேருந்து வசதியை வழங்கிய தமிழக அரசு, கும்மிடிப்பூண்டி பெண் தொழிலாளர்களுக்கு பேருந்து வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.