sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆக்கிரமிப்பில் மகளிர் சுயஉதவிக்குழு கட்டடங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பெண்கள் எதிர்பார்ப்பு

/

ஆக்கிரமிப்பில் மகளிர் சுயஉதவிக்குழு கட்டடங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பெண்கள் எதிர்பார்ப்பு

ஆக்கிரமிப்பில் மகளிர் சுயஉதவிக்குழு கட்டடங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பெண்கள் எதிர்பார்ப்பு

ஆக்கிரமிப்பில் மகளிர் சுயஉதவிக்குழு கட்டடங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பெண்கள் எதிர்பார்ப்பு


UPDATED : ஜூலை 23, 2025 02:22 AM

ADDED : ஜூலை 23, 2025 02:19 AM

Google News

UPDATED : ஜூலை 23, 2025 02:22 AM ADDED : ஜூலை 23, 2025 02:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:திருவள்ளூர் மாவட்டம் முழுதும் மகளிர் சுயஉதவிக்குழு கட்டடங்கள் பயன் பாடில்லாமல் ஆக்கிரமிப்பில் சிக்கி வீணாகி வருகிறது.

Image 1446696


திருவள்ளூர் மாவட்டத்தில் 19,439 மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. இதில், 2.52 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். 15 ஆண்டுகளுக்கு முன், தலா 5 லட்சம் மதிப்பில், 526 ஊராட்சிகளிலும், 26.30 கோடி ரூபாய் மதிப்பில் மகளிர் சுயஉதவிக்குழு கட்டடங்கள் கட்டப்பட்டன.

அனைத்து மகளிர் சுயஉதவிக்ழு கட்டடங்களும் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருவதோடு, வாகன நிறுத்துமிடமாக மாறியுள்ளது.



தமிழகத்தில், மகளிர் சுயஉதவிக்குழுக்கள், மாநில அரசின் பெண்கள் மேம்பாட்டுக் கழகம் மூலம், 1989-ம் ஆண்டு துவக்கப்பட்டது. மகளிர் சுயசார்பு அடைவதற்கு இக்குழுக்கள் உதவும் என்பதால், அனைத்து மாவட்டங்களிலும் துவக்கப்பட்டன.

தமிழகத்தில், 2009-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 59 லட்சம் குழுக்கள் இயங்கி வந்தன. தற்போது, இந்த எண்ணிக்கை, மூன்று லட்சமாக உள்ளது. மகளிர் குழுக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியது.

அவற்றில் முக்கியமானது, சுயதொழில் செய்யும் குழுக்களுக்கு உதவியாக, ஊராட்சி பகுதியில் பயிற்சி மற்றும் பணிமனை கூடங்கள் அமைத்து தரப்பட்டன.

மாவட்டம் முழுதும் உள்ள ஊராட்சிகளில், நூற்றுக்கணக்கான மகளிர் குழு கட்டடங்கள் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டன. அவற்றில், 90 சதவீதம் கட்டடங்கள், பல ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல், பூட்டியே வைக்கப்பட்டுள்ளன.

சில இடங்களில் ஆக்கிரமிப்பில் சிக்கி குடியிருப்புகளாக மாறியுள்ளது. பல கட்டடங்கள் சேதமடைந்து வருகின்றன. இதனால், மகளிர் குழுவினர் கூட்டங்களை நடத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் மகளிர் குழு கட்டடங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு, சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, மகளிர் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us