/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மகளிர் குழு உற்பத்தி பொருள் விற்பனை கண்காட்சி
/
மகளிர் குழு உற்பத்தி பொருள் விற்பனை கண்காட்சி
ADDED : அக் 11, 2025 08:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் ஜே.என்.சாலை, காமராஜர் சிலை அருகில் பூமாலை வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. அந்த வளாகத்தில் நேற்று, மகளிர் சுயஉதவி குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சியை, கலெக்டர் பிரதாப் துவக்கி வைத்தார்.
விற்பனை கண்காட்சியில், 54 மகளிர் சுய உதவிக் குழுவினரின் உற்பத்தி பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. நேற்று துவங்கிய இக்கண்காட்சி, வரும் 20ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.