/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வேளாண் விளைபொருள் மதிப்பு கூட்டு மையம் அமைக்க ரூ.1.50 கோடி மானியம்
/
வேளாண் விளைபொருள் மதிப்பு கூட்டு மையம் அமைக்க ரூ.1.50 கோடி மானியம்
வேளாண் விளைபொருள் மதிப்பு கூட்டு மையம் அமைக்க ரூ.1.50 கோடி மானியம்
வேளாண் விளைபொருள் மதிப்பு கூட்டு மையம் அமைக்க ரூ.1.50 கோடி மானியம்
ADDED : அக் 11, 2025 08:22 PM
திருவள்ளூர்:வேளாண் விளைபொருள் மதிப்பு கூட்டு மையம் அமைக்க, அதிகபட்சமாக 1.50 கோடி ரூபாய் வரை மானியம் வழங்கப்பட உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
வேளாண் விளைபொருட்களுக்கான மதிப்பு கூட்டு மையங்கள் அமைக்கும் சிறப்பு திட்டத்தை, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 10 கோடி ரூபாய் வரையிலான புதிய திட்டத்திற்கு மானியம் 25 சதவீதம், பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35 சதவீதம் என, அதிகபட்சமாக 1.50 கோடி ரூபாய் வரை மானியம் வழங்கப்படும்.
இது தவிர 5 சதவீதம் வட்டி மானியம், ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
மிளகாய், முருங்கை, வாழை, மா, மல்லிகை, சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி உள்ளிட்ட பல்வேறு வேளாண் விளைபொருட்களுக்கு, மதிப்பு கூட்டுதல் அலகு அமைக்க வழிவகுக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுயஉதவி குழுக்கள், தனியார் தொழில்முனைவோர், தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், இத்திட்டம் குறித்து https://www/agrimark/tn/gov/in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.