/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு சட்டக்கல்லுாரியில் மகளிர் சுயஉதவிக்குழு தின விழா
/
அரசு சட்டக்கல்லுாரியில் மகளிர் சுயஉதவிக்குழு தின விழா
அரசு சட்டக்கல்லுாரியில் மகளிர் சுயஉதவிக்குழு தின விழா
அரசு சட்டக்கல்லுாரியில் மகளிர் சுயஉதவிக்குழு தின விழா
ADDED : ஜூன் 12, 2025 10:50 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த, பட்டறைபெரும்புதுார் பகுதியில் உள்ள சென்னை அரசு சட்டக்கல்லுாரியில் மகளிர் சுயஉதவிக்குழு தினவிழா நடந்தது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் தலைமை வகித்தார். விழாவில் 1, 014 மகளிர் சுய உதவிக் குழுக்கள் கொண்ட 2, 028 பயனாளிகளுக்கு 131.80 கோடியில் வங்கி கடனுதவியினை கலெக்டர் வழங்கி பேசியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் 19,439 மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளன. இதில் 2.52 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 14, 272 குழுக்களில் 1.85 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.
நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் 5,167 குழுக்களில் 67, 171 உறுப்பினர்கள் உள்ளனர். 2025-- 2026ம் ஆண்டில் சுய உதவிக் குழுக் கடனாக 247.87 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் முதல் கட்டமாக 1,014 சுய உதவிக் குழுக்கள் கொண்ட 2,028 பயனாளிகளுக்கு 131.80 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இதை மூலதனமாக கொண்டு பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைந்து சமுதாயத்தில் உயர்ந்து நிற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மகளிர் திட்ட இயக்குநர் செல்வராணி, அம்பேத்கர் சட்டக் கல்லுாரி முதல்வர் கயல்விழி, உதவி திட்ட அலுவலர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர், வட்டார இயக்க மேலாளர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.