/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நந்தியாற்றின் குறுக்கே பாலம் ரூ.7.50 கோடியில் பணி துவக்கம்
/
நந்தியாற்றின் குறுக்கே பாலம் ரூ.7.50 கோடியில் பணி துவக்கம்
நந்தியாற்றின் குறுக்கே பாலம் ரூ.7.50 கோடியில் பணி துவக்கம்
நந்தியாற்றின் குறுக்கே பாலம் ரூ.7.50 கோடியில் பணி துவக்கம்
ADDED : ஜூன் 06, 2025 09:17 PM
திருத்தணி:திருத்தணி - பொதட்டூர்பேட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலையில், 24 மணி நேரமும் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். திருத்தணி அடுத்த அகூர் ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் செல்லும் நந்தியாற்றின் குறுக்கே வாகனங்கள் செல்ல தரைப்பாலம் மட்டுமே உள்ளது.
மழைக்காலத்தில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது, தரைப்பாலத்தின் மீது 3.5 அடி உயரத்திற்கு மேல் வெள்ளம் செல்லும். இதனால், வாகன போக்குவரத்து தடைபடும்.
இதுகுறித்து நம் நாளிதழில் தொடர்ந்து படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் நந்தியாற்றின் குறுக்கே, சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், 7.50 கோடி ரூபாயில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, 'டெண்டர்' விடப்பட்டது.
நேற்று திருத்தணி தி.மு.க.,- எம்.எல்.ஏ., சந்திரன் பணிகளை துவங்கி வைத்தார். இப்பணிகள், ஒன்பது மாதத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு விடுவதற்கு, திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் திட்டமிட்டுள்ளனர்.