/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கலெக்டர் அலுவலக வளாகத்தில் பூங்கா அமைக்கும் பணி வேகம்
/
கலெக்டர் அலுவலக வளாகத்தில் பூங்கா அமைக்கும் பணி வேகம்
கலெக்டர் அலுவலக வளாகத்தில் பூங்கா அமைக்கும் பணி வேகம்
கலெக்டர் அலுவலக வளாகத்தில் பூங்கா அமைக்கும் பணி வேகம்
ADDED : ஜூலை 05, 2025 10:57 PM

திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், 3.99 கோடி ரூபாய் மதிப்பில், சாலை பாதுகாப்பு பூங்கா மற்றும் படிப்பகம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.
திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில், கலெக்டர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஊரக வளர்ச்சி, வேளாண்மை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் மாவட்ட தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ளன.
இதில், திருவள்ளூர் - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையையொட்டி, கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. நெடுஞ்சாலையில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும் நடைபாதையின் இடதுபுறம், இரண்டு செயற்கை குளம் மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா உள்ளது.
வலதுபுறம் ஒரு செயற்கை குளம் மற்றும் அடர்வனம் அமைந்து உள்ளது.
இந்த இரண்டு பகுதியிலும், மாவட்ட நிர்வாகம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பூங்கா மற்றும் படிப்பகம், 3.99 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கும் பணி, கடந்த ஏப்., மாதம் துவங்கியது.
இதில், 2.29 கோடி ரூபாய் மதிப்பில் சாலை பாதுகாப்பு பூங்கா, நடைபயிற்சி பாதை, மாணவர்களின் அறிவு திறன் மேம்படுத்தும் வகையில் அறிவியல் சார்ந்த உபகரணங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், இருக்கை வசதி, விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட உள்ளன.
போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், இயற்கை சூழ்ந்த நிலையில், 1.70 கோடி மதிப்பில் படிப்பகம் அமைக்கப்பட உள்ளது. இந்த ஆண்டுக்குள் பணி நிறைவடைய உள்ளது.