ADDED : மார் 21, 2025 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி, அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிபுல் போரா, 28. கவரைப்பேட்டை அடுத்த பஞ்செட்டியில் வசித்தபடி, அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, பஞ்செட்டி பகுதியில், சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி, பலத்த காயமடைந்தார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கவரைப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.