ADDED : பிப் 13, 2024 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சித்தேரி புதிய அண்ணா தெருவை சேர்ந்தவர் ராஜா, 30. கூலி தொழிலாளியான இவர், நேற்று மதியம் கும்பினிபேட்டையில் இருந்து புதுார் சாலையில் தனக்கு சொந்தமான ஹூரோ ஹோண்டா பேஷன் பைக்கில் சென்றார்.
அப்போது எதிரே சின்ன கைனுாரை சேர்ந்த சத்யா, 40 என்பவர் ஹூரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பைக்கில் வந்தார். இருவரும் நேருக்கு நேர் நிலைத்தடுமாறி மோதினர்.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த சத்யாவை அங்கிருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.