/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பந்தல் அமைத்த போது விபரீதம் தொழிலாளி பலி; 6 பேர் காயம்
/
பந்தல் அமைத்த போது விபரீதம் தொழிலாளி பலி; 6 பேர் காயம்
பந்தல் அமைத்த போது விபரீதம் தொழிலாளி பலி; 6 பேர் காயம்
பந்தல் அமைத்த போது விபரீதம் தொழிலாளி பலி; 6 பேர் காயம்
ADDED : ஆக 16, 2025 12:54 AM

கும்மிடிப்பூண்டி:தனியார் வீட்டுமனை விற்பனை அலுவவலகத்திற்கு, பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது, இரும்பு கம்பி மின்ஒயரில் உரசியதில், வடமாநில தொழிலாளி உயிரிழந்தார். மேலும், ஆறு பேர் காயமடைந்தனர்.
கவரைப்பேட்டை அடுத்த சின்னம்பேடு கிராமத்தில், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் வீட்டுமனைகளை அமைத்து வருகிறது. இதற்கான பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
நேற்று காலை விற்பனை பிரிவிற்கான அலுவலகம் அமைக்க, 'அரேபியன் டென்ட்' எனப்படும் கூம்பு வடிவ பந்தல் அமைக்கும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது, பந்தலின் ஒரு பகுதி கம்பி மின்ஒயரில் உரசியதால், மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த மோமின் இஸ்லாம், 28, உள்ளிட்ட ஏழு பேர் மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டனர்.
அவர்களை மீட்ட சக தொழிலாளர்கள், பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, மோமின் இஸ்லாம் உயிரிழந்தார்.
காயமடைந்த முஸ்பேர் இஸ்லாம், 25, சதாம் உசேன், 24, ராஜுசாக், 23, பெயூரல்சாக், 35, மெய்டூ இஸ்லாக், 20, சபிகுல்மண்டால், 33, ஆகியோருக்கு முதலுதவி அளித்து, மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து, கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.