/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
/
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
ADDED : செப் 30, 2024 04:30 AM

திருவள்ளூர் : சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக, ஆறு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த பணிகள் சில தினங்களுக்கு முன் துவங்கியது.
இதையடுத்து நெடுஞ்சாலையோரம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.
இதில், திருவள்ளூர் அடுத்த, குப்பம்மாள்சத்திரம் பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் நெடுஞ்சாலையோரம் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார்.
இதையடுத்து இவரது கடையில் வேலை பார்த்த ஊழியரான கடம்பத்துார் ஒன்றியம், விடையூர், இந்திரா நகரைச் சேர்ந்த சென்றாயன், 38, என்பவர், நேற்று, காலை 8:30 மணியளவில் கடையில் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது கடையின் மேல் பகுதியில் இரும்பு சீட்டை கழற்றும் பணியில் ஈடுபட்ட போது எதிர்பாராத விதமாக கடையின் மேலே சென்று கொண்டிருந்த 110 கிலோவாட் உயர் அழுத்த மின் கம்பியின் மீது இரும்பு சீட் உரசியதில் சென்றாயன் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
திருவள்ளூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சென்றாயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

