ADDED : ஏப் 19, 2025 10:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 29. கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் அருகே சித்துார்நத்தம் கிராமத்தில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 10ம் தேதி கொதிகலன் அருகே நின்றபடி வேலை பார்த்தார். அதிலிருந்து இரும்பு தீக்குழம்பு சிதறி, அவர் மீது தெறித்தது. பலத்த தீக்காயங்களுடன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

