/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மினி லாரி - லோடு வேன் மோதி தொழிலாளி பலி
/
மினி லாரி - லோடு வேன் மோதி தொழிலாளி பலி
ADDED : ஜன 05, 2025 08:13 PM
ஆவடி:செங்குன்றம், பவானி நகரைச் சேர்ந்தவர் முனியாண்டி, 50; லோடுமேன். இவர், நேற்று முன்தினம் இரவு, ஸ்ரீபெரும்புதுாரில் பொருட்களை இறக்கி விட்டு, நிறுவனத்தின் 'பொலிரோ மேக்ஸ்' சரக்கு வாகனத்தில், வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வாகனத்தை தென்காசியைச் சேர்ந்த பிரசன்னா, 41, என்பவர் ஓட்டினார்.
வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, நெமிலிச்சேரி அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம், முன்னால் சென்ற, 'டாடா' மினி லாரியில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், முனியாண்டி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், பலத்த காயமடைந்த பிரசன்னாவை மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து ஏற்படுத்திய, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மினி லாரி ஓட்டுனர் கிருஷ்ணமூர்த்தி, 38, என்பவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

