/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நாலுாரில் வேலை கேட்டு நுாறுநாள் பணியாளர்கள் மறியல்
/
நாலுாரில் வேலை கேட்டு நுாறுநாள் பணியாளர்கள் மறியல்
நாலுாரில் வேலை கேட்டு நுாறுநாள் பணியாளர்கள் மறியல்
நாலுாரில் வேலை கேட்டு நுாறுநாள் பணியாளர்கள் மறியல்
ADDED : டிச 05, 2024 11:27 PM
மீஞ்சூர், மீஞ்சூர் ஒன்றியம், நாலுார் ஊராட்சிக்கு உட்பட்ட நாலுார் ஏரிமேடு கிராமத்தைச் சேர்ந்த நுாறுநாள் பணியாளர்கள் நேற்று காலை, அதே பகுதியில் உள்ள பொன்னேரி - திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தங்களுக்கு, நுாறுநாள் பணி சரிவர வழங்குவதில்லை எனவும், அதற்கான நடவடிக்கை எடுக்காத மீஞ்சூர் ஒன்றியம் மற்றும் நாலுார் ஊராட்சி நிர்வாகத்தை கண்டிபபதாகவும் கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, தகவல் அறிந்த மீஞ்சூர் ேபாலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
அதையடுத்து, நுாறுநாள் பணியாளர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.