/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

ADDED : நவ 13, 2024 09:03 PM
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில், கடல்நீரை குடிநீராக்கும் ஆலை செயல்படுகிறது. கடந்த 2010ல், இங்கு தினமும், 10 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படும் வகையில் துவங்கப்பட்டது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் குடிநீர், சென்னை குடிநீர் வாரியத்தின் வாயிலாக, சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று வினியோகிக்கப்படுகிறது. இங்கு ஒப்பந்த அடிப்படையில், 110 பேர் பணிபுரிகின்றனர்.
இவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் நிர்வாகம் மற்றும் தொழிலாளர் சங்கம் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி, சம்பள உயர்வு மற்றும் இதர சலுகைகளுக்கு தீர்வு காணப்பட்டு வந்தது.
கடந்த 2023 - 24ம் ஆண்டிற்கான ஊதிய உயர்வு, உணவுப்படி உயர்வு, தொழிலாளர்களுக்கு உடல் முழு பரிசோதனை, கல்வி மற்றும் திருமண உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கை மீது, நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் நடப்பாண்டு, தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முதல் தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தால், ஆலையில் உற்பத்தி பாதித்து, சென்னைக்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டோரிடம், ஆலை நிர்வாகம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது.சென்