/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி சுதந்திரா பள்ளி மாணவர்களின் படைப்புகள்
/
திருத்தணி சுதந்திரா பள்ளி மாணவர்களின் படைப்புகள்
ADDED : பிப் 04, 2025 01:05 AM

திருத்தணி, திருத்தணி சுதந்திரா மேல்நிலைப் பள்ளியில் மாணவ - மாணவியரின் படைப்பாற்றல், அறிவு மற்றும் திறன்களை வெளிக் கொண்டும் வரும் வகையில் மெகா நிகழ்ச்சி நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியை பள்ளி தலைவர் பேராசிரியர் ரங்கநாதன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
இதில், சுகாதார மற்றும் ஆரோக்கிய உணவு வகைகள், மழைநீர் சேகரிப்பு, உலக அதிசயங்கள், தமிழர் திருநாள் விழா, பாரம்பரிய உடை, உணவு, நவீன விஞ்ஞான படைப்புகள், சோலார் சிஸ்டம், அவசர உதவி எண்கள், மாணவியர் பாதுகாப்பு விழிப்புணர்வு அவசர உதவி எண்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் திறன்பட செய்திருந்தனர்.
இதில், பள்ளி தாளாளர் சியாமளா ரங்கநாதன் பங்கேற்று மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டு, சிறப்பு படைப்பு மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். பள்ளி முதல்வர் துரைகுப்பன் நன்றி கூறினார்.