/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி
/
உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூலை 12, 2025 01:08 AM

திருவள்ளூர்:உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பிரதாப் தலைமையில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பேரணியை கலெக்டர் துவக்கி வைத்தார். இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று, நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில், மருத்துவ இணை இயக்குநர் அம்பிகா, துணை இயக்குநர் சேகர், மாவட்ட சுகாதார அலுவலர் பிரியா ராஜ், பிரபாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.