/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் அரசு மருத்துவமனை பிணக்கிடங்கில் சடலத்தில் நெளிந்த புழுக்கள்; உறவினர்கள் அதிர்ச்சி
/
திருவள்ளூர் அரசு மருத்துவமனை பிணக்கிடங்கில் சடலத்தில் நெளிந்த புழுக்கள்; உறவினர்கள் அதிர்ச்சி
திருவள்ளூர் அரசு மருத்துவமனை பிணக்கிடங்கில் சடலத்தில் நெளிந்த புழுக்கள்; உறவினர்கள் அதிர்ச்சி
திருவள்ளூர் அரசு மருத்துவமனை பிணக்கிடங்கில் சடலத்தில் நெளிந்த புழுக்கள்; உறவினர்கள் அதிர்ச்சி
UPDATED : ஆக 05, 2025 11:36 AM
ADDED : ஆக 04, 2025 11:00 PM
ஊத்துக்கோட்டை ரயில் விபத்தில் பலியான கல்லுாரி மாணவரின் உடல், திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், உடலில் புழுக்கள் இருந்ததால், உறவினர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ஜெ.என்., சாலையில் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும், 4,000த்திற்கும் மேற்பட்டோர் புற நோயாளிகளாகவும், 500க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொமக்கம்பேடு கிராமம், மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சேகர், 50; எலக்ட்ரீஷியன். இவரது மனைவி ரேணுகா. இவர்களது மகன் விஜயகுமார், 19; தனியார் கல்லுாரியில், பி.காம்., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த மாதம், 25ம் தேதி வீட்டில் இருந்து சென்ற விஜயகுமார் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை சேகர் கொடுத்த புகாரின் அடிப்படையில், விஜயகுமாரை வெங்கல் போலீசார் தேடி வந்தனர்.
விஜயகுமார் காணாமல் போன தினத்தன்று, திருநின்றவூர் ரயில் நிலையம் அருகே, வாலிபர் ஒருவர் உடல் துண்டாகி இறந்த நிலையில், சடலத்தை திருவள்ளூர் ரயில்வே போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மீட்கப்பட்ட உடல், கொமக்கம்பேடில் மாயமான வாலிபர் விஜயகுமார் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அவரின் உறவினர்கள், திருவள்ளூர் அரசு மருத்துவமனை பிணவறையில் இருந்த சடலத்தை அடையாளம் காட்டினர்.
போலீசார் உதவியுடன் சடலத்தை, கொமக்கம்பேடிற்கு எடுத்து சென்றனர். இறந்து ஒரு வாரமான நிலையில், சடலத்தில் புழுக்கள் இருந்தது கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனை பிணவறையில் குளிர்சாதன வசதி இருக்கிறதா அல்லது பழுதடைந்து உள்ளதா என தெரியாத நிலையில், சடலத்தை கண்ணீர் சிந்தியபடி அடக்கம் செய்தனர்.
இது குறித்து, விஜயகுமாரின் உறவினர் வெளியிட்ட வீடியோ கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் அரசு மருத்துவமனையை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தால் மட்டுமே, இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.