/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் யோகிபாபு தரிசனம் படம் மட்டும்
/
திருத்தணியில் யோகிபாபு தரிசனம் படம் மட்டும்
ADDED : செப் 25, 2024 12:56 AM

திருத்தணி:தமிழ் திரைப்பட சிரிப்பு மற்றும், குணசித்திர நடிகரான யோகிபாபு,40. இவர் மட்டும் நேற்று காலை திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்தார். பின், ஆபத்சகாய விநாயகர், சண்முகர், மூலவர். வள்ளி, தெய்வானை மற்றும் உற்சவர் முருகப்பெருமான் ஆகிய சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிப்பட்டார்.
தொடர்ந்து அங்கிருந்து முருகன் துணை கோவிலான மத்துார் மகிஷா சுரமர்த்தினி அம்மன் கோவிலுக்கும் நடிகர் யோகிபாபு சென்று மூலவர் அம்மனை வழிப்பட்டார். பின் யோகிபாபு, கோவில் துாய்மை பணியாளர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அப்போது, நிருபர்கள் பேட்டி எடுக்க முயன்ற போது, நான் முருக பக்தர் என்பதால் அடிக்கடி திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்து தரிசிப்பேன். வேறு எவ்வித காரணம் இல்லை. பேட்டியும் கொடுக்க மாட்டேன் என கூறிவிட்டு சென்றார். நடிகர் யோகிபாபு உடன் செல்பி எடுக்க பக்தர்கள் முண்டியடித்து சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.