/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காக்களூர் தொழிற்பேட்டையில் காலி மனைக்கு விண்ணப்பிக்கலாம்
/
காக்களூர் தொழிற்பேட்டையில் காலி மனைக்கு விண்ணப்பிக்கலாம்
காக்களூர் தொழிற்பேட்டையில் காலி மனைக்கு விண்ணப்பிக்கலாம்
காக்களூர் தொழிற்பேட்டையில் காலி மனைக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : அக் 08, 2024 09:57 PM
திருவள்ளூர்:காக்களூர் தொழிற்பேட்டையில் காலியாக உள்ள மனையில், தொழிற்சாலை அமைக்க விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு 'சிட்கோ' நிறுவனத்திற்கு சொந்தமான, திருவள்ளூர் தாலுகா, காக்களூர் தொழிற்பேட்டையில், ஒரு காலி மனை உள்ளது.
புதிதாக தொழில் தொடங்க தொழிற்மனை அமைக்க விரும்புவோர் http://www.tansidco.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், தமிழகத்தில், 'சிட்கோ'விற்கு சொந்தமாக அமைந்துள்ள தொழிற்பேட்டைகளின் காலிமனைகளின் விவரத்தையும் இதே இணையத்தில் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.
காலி மனையை பார்வையிட, கிளை மேலாளரான மகேஸ்வரியை, 94450 06568 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.