/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூண்டியில் வெளியேறும் உபரிநீரில் ஆபத்தாக குளிக்கும் வாலிபர்கள்
/
பூண்டியில் வெளியேறும் உபரிநீரில் ஆபத்தாக குளிக்கும் வாலிபர்கள்
பூண்டியில் வெளியேறும் உபரிநீரில் ஆபத்தாக குளிக்கும் வாலிபர்கள்
பூண்டியில் வெளியேறும் உபரிநீரில் ஆபத்தாக குளிக்கும் வாலிபர்கள்
ADDED : நவ 19, 2025 01:33 AM

ஊத்துக்கோட்டை: பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து மதகுகள் வழியே வெளியேறும் உபரிநீரில், உள்ளூரைச் சேர்ந்த வாலிபர்கள் ஆபத்தை உணராமல் குளித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்த்தேக்கங்களில் பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கம் முக்கியமானது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதன் மொத்த கொள்ளளவு, 3.23 டி.எம்.சி., தற்போது 2. 260 டி.எம்.சி., தண்ணீர் உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திற்கு, 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு மதகுகள் திறக்கப்பட்டு, வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது .
நீர்த்தேக்கத்தில் இருந்து மதகுகள் வழியே வெளியேறும் நீரில், உள்ளூரைச் சேர்ந்த வாலிபர்கள், பூண்டியை காண வரும் சுற்றுலா பயணியர் ஆபத்தை உணராமல் குளிக்கின்றனர்.
எனவே, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன், திருவள்ளூர்கலெக்டர் பிரதாப், அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் போலீசாரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

