/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் இளைஞர் கைது
/
இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் இளைஞர் கைது
ADDED : மார் 17, 2024 10:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த மங்கம்மாபேட்டை பகுதியில் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மங்கம்மாபேட்டை ஏரிக்கரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், 19 என்பதும் கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது.
அவரிடம் இருந்து, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

