/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.5 லட்சம் குட்கா பறிமுதல் வாலிபர் கைது
/
ரூ.5 லட்சம் குட்கா பறிமுதல் வாலிபர் கைது
ADDED : ஆக 06, 2025 02:46 AM

ஊத்துக்கோட்டை,:ஆந்திராவில் இருந்து ஊத்துக்கோட்டை வழியே, குட்கா புகையிலைப் பொருட்கள் கடத்தப்படுவதாக, போலீசுக்கு தகவல் கிடைத்தது. ஊத்துக்கோட்டை போலீசார், நேற்று சோதனைச் சாவடியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, தனிப்படை போலீசார், ஆந்திராவில் இருந்து வந்த காரை பின்தொடர்ந்தனர். ஊத்துக்கோட்டையில் வாகன சோதனையில் கார் நிறுத்தப்பட்டபோது, தனிப்படை போலீசார் காரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
காரின் ஓட்டுநர் ராஜஸ்தான சேர்ந்த சர்வன்குமார், 28, கைது செய்யப்பட்டார். காரை சோதனை செய்ததில், 65 மூட்டைகளில், 500 கிலோ குட்கா பொருட்கள் இருந்தன. அவற்றின் மதிப்பு, 5 லட்சம் ரூபாய். ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து, சர்வன்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.