/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போதை மாத்திரையுடன் பதுங்கிய வாலிபர் கைது
/
போதை மாத்திரையுடன் பதுங்கிய வாலிபர் கைது
ADDED : ஆக 21, 2025 01:58 AM

பேரம்பாக்கம்:கூவம் ஆற்றில் போதை மாத்திரையுடன் பதுங்கியிருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., விவேகானந்தா சுக்லாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி தனிப்படை போலீசார், நேற்று அதிகாலை பேரம்பாக்கம் பகுதியில் உள்ள கூவம் ஆறு அருகே ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது, கூவம் ஆற்றில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தபோது, அவரிடமிருந்து 170 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், 25, என்பதும், போதை மாத்திரைகளை பதுக்கி விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, தனிப்படை போலீசார், மப்பேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த மப்பேடு போலீசார், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.