/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போதை மாத்திரை சப்ளை செய்த வாலிபர் சிக்கினார்
/
போதை மாத்திரை சப்ளை செய்த வாலிபர் சிக்கினார்
ADDED : ஆக 23, 2025 01:00 AM

மப்பேடு:மப்பேடு அருகே போதை மாத்திரைகளை விற்பனை செய்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., விவேகானந்தா சுக்லாவுக்கு கிடைத்த தகவலின்படி, தனிப்படை போலீசார், கடந்த 20ம் தேதி அதிகாலை பேரம்பாக்கம் கூவம் ஆற்றுப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு சுற்றிக் கொண்டிருந்த ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், 25, என்பவரிடமிருந்து 170 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த மப்பேடு போலீசார், சந்தோஷை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டம், சீனிவாசன்பேட்டை பகுதியைச் சேர்ந்த விக்கி, 31, என்பவர், மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து, சந்தோஷிற்கு விற்பனைக்கு கொடுத்தது தெரியவந்தது.
நேற்று, மப்பேடு போலீசார் விக்கியை கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.