/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பைக் திருட முயற்சி வாலிபர் சிக்கினார்
/
பைக் திருட முயற்சி வாலிபர் சிக்கினார்
ADDED : ஜூன் 25, 2025 02:40 AM
திருவாலங்காடு:ஆற்காடுகுப்பத்தில் வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
திருவாலங்காடு ஒன்றியம் ஆற்காடுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசந்திரன், 34. இவர், நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் வீட்டின் வெளியே சத்தம் கேட்டதை தொடர்ந்து வெளியே வந்து பார்த்தார்.
அப்போது, இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருட முயன்றது தெரிந்தது.
இதையடுத்து, பகுதிவாசிகளிடம் தகவல் தெரிவித்த ஜெயசந்திரன், அவர்களின் உதவியோடு இருசக்கர வாகன திருடனை பிடித்தார்.
பின், கனகம்மாசத்திரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், கடம்பத்தூர் அடுத்த கசவநல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 20, என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.