ADDED : நவ 05, 2024 07:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் பிரதீப், 28. இவர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு யமாஹா ஆர் 15 வாகனத்தில் சென்று விட்டு நேற்று அதிகாலை சென்னை திரும்பினார்.
சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை கனகம்மாசத்திரம் அடுத்த கூளூர் அருகே வந்த போது எதிரே திருவள்ளூரில் இருந்து திருத்தணி நோக்கி சென்ற அரசு பேருந்து தடம் எண் 97 மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.