/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலி
/
ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலி
ADDED : ஜன 29, 2025 12:27 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முல்லைவேந்தன், 25; இவர், அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
நேற்று காலை வழக்கம் போல வேலைக்கு அரக்கோணத்தில் இருந்து, சென்னை சென்ட்ரல் நோக்கி சென்ற புறநகர் ரயிலில், திருவாலங்காடு ரயில் நிலையத்தில் ஏறி பயணித்தார்.
கூட்ட நெரிசல் இருந்தால் படியருகே நின்றிருந்தார். ரயில், திருவாலங்காடை கடந்தபோது கால் தவறி தண்டவாளத்தில் விழுந்தார். இதில், கால்கள் துண்டான நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து, வழக்கு பதிந்த அரக்கோணம் ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.