ADDED : பிப் 07, 2025 01:51 AM

திருவள்ளூர்:ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், வெங்கடநரசிம்ம ராஜவாரி பேட்டை,ரெட்டி குண்டா, தடுக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முரளி, 27. பூந்தமல்லியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார்.
இவர், நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து வழக்கம் போல முரளி, 'ஹோண்டா ஷைன்' இருசக்கர வாகனத்தில் பூந்தமல்லியில் இருந்து, ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திருவள்ளூர் அடுத்துள்ள, பட்டரைப்பெருமந்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர் திசையில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், சம்பவ இடத்தியே முரளி உயிரிழந்தார்.
மேலும், விபத்து ஏற்படுத்திய அந்த வாகனம், அதே சாலையில் வந்து கொண்டிருந்த, 'டி.வி.எஸ்., ஸ்கூட்டி' இருசக்கர வாகனம் மீது மோதி விட்டு நிற்காமன் சென்று விட்டது.
இதில், திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசர், 30, என்பவர், படுகாயமடைந்து, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவள்ளூர் தாலுகா போலீசார் விபத்தில் உயிரிழந்த முரளியின் சடலத்தை கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.