/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை விபத்தில் வாலிபர் உயிரிழப்பு
/
சாலை விபத்தில் வாலிபர் உயிரிழப்பு
ADDED : மே 11, 2025 09:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் கிராமத்தில் வசித்தவர் ஸ்ரீராம், 30; தனியார் தொழிற்சாலை ஊழியர். கடந்த 4ம் தேதி அப்பாவரம் கிராமத்தில் உள்ள அக்கா வீட்டிற்கு, இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, ராக்கம்பாளைம் அடுத்த சென்னாவரம் பேருந்து நிறுத்தம் அருகே, எதிரே வந்த சரக்கு ஆட்டோ மோதியது. பலத்த காயமடைந்த ஸ்ரீராம், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.