/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மான் மோதி விபத்து வாலிபர் உயிரிழப்பு
/
மான் மோதி விபத்து வாலிபர் உயிரிழப்பு
ADDED : பிப் 27, 2024 10:11 PM
திருவாலங்காடு:ஆந்திர மாநிலம் சித்துார் அடுத்த விஜயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 26. இவர், கடந்த 21ம் தேதி திருவாலங்காடில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்தார்.
பின், மாலை கனகம்மாசத்திரம் மாநில நெடுஞ்சாலை வழியாக, அவரது வீட்டிற்கு 'ஹோண்டா சைன்' இருசக்கர வாகனத்தில் சென்றார்.
அத்திப்பட்டு கூட்டுச்சாலையில் உள்ள காப்புக்காடு அருகே, இருசக்கர வாகனம் மீது மான் மோதியதில், கீழே விழுந்த ரமேஷ் படுகாயமடைந்தார்.
அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, நேற்று மாலை சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

