ADDED : ஜூலை 08, 2025 09:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:நெடுஞ்சாலை மைய தடுப்பை கடக்க முயன்ற வாலிபர், ஆட்டோ மோதி படுகாயமடைந்தார்.
திருவள்ளூர் பகுதியில், காமராஜர் சிலை அருகே, சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் மைய தடுப்பு பகுதியில் உள்ள மின்கம்பத்தின் இடையில் எகிறி குதித்து, சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, வேகமாக வந்த ஆட்டோ மோதியதில், வாலிபர் துாக்கி வீசப்பட்டார். பின், ஆட்டோ நிற்காமல் சென்று விட்டது.
இதையடுத்து, அப்பகுதிவாசிகள் வாலிபரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
திருவள்ளூர் நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.